Posts

Image
  சீறாப்புராணம் மானுக்குப்   பிணை   நின்ற   படலம் சீறாப்புராணம் :  சீறா + புராணம் = சீறாப்புராணம் ; ‘ சீறத் ’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது . சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள் . உலகில் தூய வாழ்க்கை நடத்திய உத்தமர் ஒருவரின் ( நபிகள் நாயகம் ) வரலாற்றைக் கூறும் நூலாதலால் இது சீறாப்புராணம் என வழங்கலாயிற்று . இந்நூல் அறம் , பொருள் , இன்பம் ஆகிய மூன்றையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது . உமறுப்புலவர் :  சீறாப்புராணத்தைப் பாடியவர் உமறுப்புலவர் . இவரது தந்தையார் சேகு முதலியார் . இராமநாதபுரத்தையடுத்த கீழைக்கரை இவர் பிறந்த ஊராகும் . இவர் கடிகை முத்துப்புலவரின் சீடர் . சீதக்காதி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் . உமறுப்புலவர் பாடிய மற்றொரு நூல் ‘ முதுமொழி மாலை ’   என்பதாகும் . மானுக்குப் பிணை நின்ற படலம் :  நுபுவத்துக் காண்டம் என்னும் இந்நூலின் இரண்டாவது காண்டத்தில் உள்ளது இப்படலம் . நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று , அம்மானை அவனிடமிருந்த