Posts

Showing posts from October, 2020
Image
  உலகமயமாக்கல் பின்னணியில்   பண்பாடும் , வாசிப்பும் தொ. பரமசிவம் (மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் ஆற்றிய உரை )   ‘ பேசுகின்ற இடம் மதுரை : பேசப்படுகின்ற விசயம் புத்தகம் , எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது . ஏனென்றால் , தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில்தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன . கலித்தொகை என்னும் செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது . பரிபாடல் என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம் . அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு . இந்த ஊரின் நீரும்இ நெருப்பும்கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல் . “ உலகமயமாக்கலில் பண்பாடும் ; வாசிப்பும் ” என்னும் தலைப்பை கொடுத்திருக்கிறார்கள் . புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல . அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது . ஒரு செடியில் வேருக்கும் விழுகும் உள்ள தொடர்பு போன்றது புத்தங்களும் வாசிப்பவனுக்கும்உள்ள தொடர்பு . புத்தகங்களின் மீது சமூகம்