Posts

Image
  பிள்ளைத்தமிழ் - அறிமுகம் இ றைவன் பிரியத்துக்குரியவன் . அந்தப் பிரியமானவனுக்கு , இருப்பதில் உயர்வானதை - மிகச் சிறந்ததை சமர்ப்பித்து சந்தோஷப்படுத்த மனம் ஆசைப்படும் . அவனைப் பாடும்போதும் , உயர்வான பொருள் வைத்துப் பாடத் தோன்றும் . சரி ... இருப்பதில் உயர்வானது - மிகச் சிறந்தது , எது ? பிள்ளைச் செல்வத்தைவிட வேறு உயர்ந்தது உண்டா என்ன ?! ஆகவேதான் , இறையை பிள்ளையாய்க் கருதி , பிள்ளைத் தமிழ் பாடி வைத்தார்கள் போலும் நம் பெரியவர்கள் ! வேறொரு விதமாகவும் பார்க்கலாம் ! இறையை தோழனாக்கினார் சுந்தரர் ; அவனை நாயகனாக்கி , தான் காதலியாகி பாடி மகிழ்ந்தார் திருமங்கையாழ்வார் ; அன்னையே என்றார் அபிராமிப் பட்டர் . இப்படி , அறிந்துணர்தற்கு அரியவனான இறைவனை , சாதாரண மனித அறிவுக்கு உகந்தவாறு அம்மை - அப்பனாகவும் , தோழனாகவும் , நாயகனாகவும் கருதி வழிபடுதல் சுலபம் . குழந்தையாய்க் கருதி அவன் மேல் அன்பைச் சொரிவது அதை விட இன்னும் எளிய வழி அல்லவா ?! இறையையும் அவனருள் பெற்ற மகான்களையும் குழந்தையாக பாவித்துச் சீராட்டி மகிழும் கவிதையே பிள்ளை தம...
Image
  திருவெழுக்கூற்றிருக்கை தேர் வடிவம்      திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. எண் வரிசை ( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள் தான் திருஎழுகூற்றிக்கை.      எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம். எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்: 1 x 1 = 1 11 x 11 = 121 111 x 111 = 12321 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 1111111 x 1111111 = 1234567654321 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு. 1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 இடையில் தேர் தட்டு … … … … … … . 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 3 2...
Image
  திருவெழுக்கூற்றிருக்கை (அருணகிரிநாதர்)   ஓருரு வாகிய தாரகப் பிரமத் தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை இருபிறப் பாளரி னொருவ னாயினை ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக் கொருகுரு வாயினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் டன்றி லங்கிரி யிரு...