பாரததேசம் - விளக்கவுரை இந்தியர்கள் என்பதில் பெருமை பண்பாடு, நாகரிகம், மொழி என்று பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டதாக இந்த உலகம் அமைந்துள்ளது. இவற்றில் தனித்துவம் மிக்கதாகவும் உயர்சிந்தனைகளை உடையதாகவும் நம் பாரததேசம் உள்ளதை உணர்த்தும் வகையில் உயரமான இமயமலையின் உச்சியிலே உலாவரவேண்டும். கடலின் மேல்மட்டதில் மட்டுமல்லாது ஆழ்கடலிலும் கப்பல்களைச் செலுத்தி உலகம் முழுமைக்கும் இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும். கல்விக் கூடங்கள் எல்லாவற்றையும் தெய்வஆலயத்தைப் போலப் புனிதமானவையாக மாற்றவேண்டும். இப்படிப்பட்ட பெருமையினை உடைய “பாரததேம்” நம்முடையது என்று நாட்டுப்பற்றோடு இரு தோள்களையும் தட்டிபெருமையோடு கூறவேண்டும். அத்தகைய பெருமைமிக்க “ பாரததேம்” உலக நாடுகள் அனைத்தும் அச்சங்கொள்ளச்செய்யும் அளவிற்கு துயரையும் பகையையும் வென்று தலைநிமிர்ந்துநிற்கிறது. (பாடல்-1) வெளிநாட்டு நட்புறவு வெளிநாடுகளுடன் நட்புறவைப்பேணும் வகையில் இந்தியா வி ன் தென்பகுதியிலுள்ள இலங்கைத்தீவுக்கு ஒரு பாலம்...