பாரததேசம் -
இந்தியர்கள் என்பதில் பெருமை
பண்பாடு, நாகரிகம், மொழி என்று பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டதாக இந்த உலகம் அமைந்துள்ளது. இவற்றில் தனித்துவம் மிக்கதாகவும் உயர்சிந்தனைகளை உடையதாகவும் நம் பாரததேசம் உள்ளதை உணர்த்தும் வகையில் உயரமான இமயமலையின் உச்சியிலே உலாவரவேண்டும். கடலின் மேல்மட்டதில் மட்டுமல்லாது ஆழ்கடலிலும் கப்பல்களைச் செலுத்தி உலகம் முழுமைக்கும் இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும். கல்விக் கூடங்கள் எல்லாவற்றையும் தெய்வஆலயத்தைப் போலப் புனிதமானவையாக மாற்றவேண்டும். இப்படிப்பட்ட பெருமையினை உடைய “பாரததேம்” நம்முடையது என்று நாட்டுப்பற்றோடு இரு தோள்களையும் தட்டிபெருமையோடு கூறவேண்டும். அத்தகைய பெருமைமிக்க “பாரததேம்” உலக நாடுகள் அனைத்தும் அச்சங்கொள்ளச்செய்யும் அளவிற்கு துயரையும் பகையையும் வென்று தலைநிமிர்ந்துநிற்கிறது. (பாடல்-1)
வெளிநாட்டு நட்புறவு
வெளிநாடுகளுடன் நட்புறவைப்பேணும் வகையில் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள இலங்கைத்தீவுக்கு ஒரு பாலம் கட்டவேண்டும். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட சேதுப்பகுதியை உயரமாக்கி தெரு அமைக்கவேண்டும். நீர்வளம் மிக்க வங்கதேசத்தில் பாயும்நதிகளின் அதிகப்படியான நீரைத்திசை திருப்பிக் கொண்டு வந்து, இந்தியாவின் நடுவிலுள்ள மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்து இந்தியாவின் வேளாண்மையை வளர்ச்சியடையச் செய்யவேண்டும். (பாடல்-2)
இந்தியாவிலுள்ள கனிமவளங்களான தங்கம் போன்ற வேறு பல தாதுப்பொருள்களைச் சுரங்கங்கள் வெட்டித் தோண்டி வெளிக் கொணா்ந்து அவற்றை உலகின் எட்டுத்திசையிலும் உள்ளநாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்று நம்நாட்டிற்குத் தேவைப்படும் அல்லது விரும்பும் பொருட்கள் அனைத்தையும் இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும்.(பாடல்-3)
உலகில் மிகப் பிரசித்திப்பெற்ற முத்துக்களைச் சேகரிக்கும் இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள கடற்பகுதியில் பல்வேறு தேசத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நம்நாட்டிற்கு விருப்பமான பொருட்களைக் கொண்டுவந்து குவித்து நம் ஆதரவைக் கேட்டுநிற்கும் அளவிற்கு நம்நாடு சிறந்துவிளங்க வேண்டும். (பாடல்-4)
நல்லிணக்கம்
சிந்துநதியின் மீது நிலவொளி வீசும் ரம்மியமான இரவுப்பொழுதில், சிறந்த கேரள நாட்டின் கன்னியர்களுடன் சேர்ந்து, இனிமையான தெலுங்கு மொழியில் பாடல்பாடி, படகுகள் செலுத்தி விளையாடுவோம். இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் நல்ல இணக்கமான போக்கு வளரவேண்டும் என்பதை வலியுறுத்த பாரதியார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைத்து இவ்வரிகளை இயற்றியுள்ளார். (பாடல் 5)
செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
கங்கையாற்றங்கரையில் விளைகின்ற கோதுமைத் தானியத்தைக் காவிரியாற்றங்கரையில் விளைகின்ற வெற்றிலைக்குப் பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்வோம். சிங்கத்தைப் போல வீரம் மிக்க மராட்டியர்களது சிறந்த கவிதைகளைப் பெற்றுக்கொண்டு கேரளநாட்டில் சிறந்து விளங்கும் யானையின் தந்தங்களை அவர்களுக்குப் பரிசாக வழங்கிட வேண்டும். (பாடல்-6)
இந்தியாவின் வடதிசையில் கல்வியில் சிறந்து விளங்கும் காசிநகரத்திலுள்ள பாவலா்கள் அங்கிருந்தபடியே ஆற்றுகின்ற சொற்பொழிவுகளை, தென்திசையிலுள்ள காஞ்சிநகரத்தில் இருந்தபடியே நாம் கேட்கும்படி நவீன அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். ராஜஸ்தானிலுள்ள வீரர்களுக்கு மாற்றாக நல்லசிறப்புடைய கன்னட நாட்டின் தங்கத்தைப் பரிமாறிக்கொள்வோம். இவ்வாறு இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் தங்களுக்குள் செல்வங்களைப் பரிமாறிக்கொள்வதன் வாயிலாக தேச ஒற்றுமையினை நிலைநாட்டவேண்டும். (பாடல்-7)
பலதிசையிலும் உள்ளநாடுகள் பலவற்றிலும் இருந்து, திரளானசெல்வங்கள் எடுத்து வரும் பன்னாட்டு வணிகர்கள் வாங்கிச் செல்லபட்டாலும் பஞ்சாலும் பலவித ஆடைகளைத் தயாரித்துச் சந்தைத் தெருக்களில் மலையென குவித்து வைத்துநம் நாட்டு வணிகத்தைப் பெருக்கவேண்டும். (பாடல்-8)
நாட்டைப் பாதுகாக்கும் கருவிகள், நல்ல தரமான காகிதங்கள், தொழிற்சாலைகள் என பலவற்றையும் உருவாக்க வேண்டும். நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைப் பெருமளவுகட்ட வேண்டும். இவையனைத்திற்காகவும் நாம் ஓய்வின்றி உழைத்து, உலகத்தின் முன்பு தலைகுனியாமல் தலைநிமிர்ந்து வலிமைமிக்கவர்கள் என்ற உண்மையினை உரைக்கும் வகையில் இந்தியர்கள் சாதனைகள் பலவற்றைப் புரிதல்வேண்டும். (பாடல்-9)
ஏற்றுமதி வளர்ச்சி
மழையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் குடைகள் செய்வோம், உழவுத் தொழிலுக்கு உதவும் கலப்பைகள், பொருட்களை நிரப்ப உதவும் சாக்குப்பைகள், இரும்பாலான ஆணிகள் ஆகியவற்றை உற்பத்திசெய்வோம். மேலும், தரைவழியாகவும் வான்வழியாகவும் செல்லும் ஊர்திகளை உருவாக்கிட வேண்டும். அதுமட்டுமல்லாது, உலகமே அஞ்சிவியக்கும் வகையில் கடல் போக்குவரத்திற்குப் பயன்படும் கப்பல்களையும் நம்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும். (பாடல்-10)
பல்துறைக் கல்வி வளர்ச்சி
அனைத்து வேதங்கள், பல்வேறு செயல்களை நிறைவேற்றுவதற்கான உத்திகள் ஆகியவற்றை நாம் கற்கவேண்டும். வானமண்டலம் மட்டுமல்லாது, மீன் முதலிய கடல்வாழ் உயிரினங்கள், சந்திரமண்டலம் ஆகியவற்றின் அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தறிந்து தெளிவடைவோம். அனைத்து நகரஉருவாக்கத்தில் (Urban construction) மிகமுக்கியப் பங்குவகிக்கும் அனைத்து ஊர்களுக்கான சாலைவசதிகள் அவைகளை ஒன்றிணைக்கும் சந்திப்புகள் (Junction) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கானப் போக்குவரத்து மற்றும் பொறியியல் துறையில் பாரததேசம் முன்னேறவேண்டும்.(பாடல்-11)
உலகத் தொழிலை உவந்து செய்யவேண்டும்
“சாதி இரண்டொழிய வேறில்லை”
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற அவ்வையாரின் வாக்கிற்கேற்ப இரண்டே இரண்டு சாதிகளைத் தவிர உலகத்தில் வேறொருசாதியில்லை என்று தமிழர்கள் முன்பே உரைத்த வாக்கினை அமிழ்தத்தைப் போல் இளிமையானது என.றும், அச்சொல் நமக்குச் சாவாநிலை நல்கக்கூடியது என்று சொல்லிக் கொண்டாடுவோம். அறத்தின் பாதையிலிருந்து விலகிவிடாமல் உதவி செய்யும் நல்லவர்களே மேல்சாதியினர் எனலாம். அவ்வாறு அல்லாதவர்கள் கீழ்சாதியினர் எனலாம் என்று பாரதியார் கூறுகின்றார். (பாடல்-13)
******
Comments
Post a Comment