பழைய மொழியில் புதைந்துள்ள செய்தி - பேராசிரியர் குருவம்மாள் சமூக பொருளாதார மானுட உளவியலை அடிப்படையாக க் கொண்ட வாழ்க்கைத் தத்துவத்தின் வார்த்தை வெளிப்பாடே பழமொழிகள். பழகிய மொழிகளின் அடியாழத்தில் உள்ள செய்தி மனிதகுலத்தின் செவ்விய சிந்தனைக்குச் சான்று முதுசொல்லின் முதிர்ந்த கருத்துக்கள் மனிதனை நெறிப்படுத்தும் மருத்துவ கையேடு. இந்தக் கிராமத்துத் திருக்குறளில் சிலவற்றை மட்டும் பதம் பிரித்துப் பார்க்கிறது இந்த கட்டுரை. 1. கோயில்இல்லாஊரில்குடியிருக்கவேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. கோயிலின் பெயரால் குழப்பங்கள், கடவுளின் பெயரால் கலவரங்கள், மதத்தின் பெயரால் பிரிவினைவாதகள் பெருகிவரும் இந்நாளில் இந்தப் பழைய மொழியில் புதைந்துள்ள செய்தியை அறிந்துகொள்வது அவசியமாகும். ‘கோ’என்றால் அரசன். ‘இல்’ என்றால் வீடு. கோயில் என்றால் அரசனின் வீடு. எப்படி ஆண்டவனின் இருப்பிடமாகும்? அரசனின் வீட்டை அரண்மனை என்றுதானே சொல்கின்றோம்? ‘அரண்’ என்றால் காவல், மனை என்றால் இடம். அரண்மனை என்றால் காவல் மிகுந்த இடம். அரசனின் இருப்பிடத்தை ‘அரண்மனை’ என்றும் ஆண்டவனின் இருப்பிடத்...