திரையிசைப் பாடல் 2
பாடல் - புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
படம் - உன்னால் முடியும் தம்பி (1988)
பாடலாசிரியர் - புலமை பித்தன்
இசை - இளையராஜா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்லமட்டும் இங்கு நாதியில்ல - சனம்?
நிம்மதியாவாழ ஒரு நாளுமில்ல -
இது
நாடாஇல்லவெறும்காடா - இதை
கேட்கயாரும் இல்லை தோழா
இது நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா (புஞ்சைஉண்டு )
---
வானத்தை எட்டிநிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம்கைகள்கூடட்டும்ஆனந்தராகம்பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம்உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
(புஞ்சைஉண்டு )
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாருதந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன்போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கை தெற்கே பாயாத காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
(புஞ்சைஉண்டு )
---
Comments
Post a Comment