நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.
1. ஊசல்
"ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்;
உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்;
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்;
அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்;
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்."
(ஓடு = ஓடிய ; அரி = செவ்வரி (சிவந்த வரி); மட =இளமை; நல்லீர் = பெண்களே; ஆடாமோ = ஆடுவோமாக; உத்தரியம் = மேல் ஆடை; ஆடகம் = பொன்; பூண் = அணிகலன்; அம் = அழகிய; மென் = மென்மையான; குழல் = கூந்தல்; சரிய = அவிழ்ந்து தொங்குமாறு; கூடலர் = பகைவர்; விண் = வான் உலகம்; கோமுற்றப்படை = திசைகளில் எல்லாம் சுற்றித் திரியும் படை; குவலயம் = மண் உலகம்; முன் தோன்றல் = முன்னால் பிறந்தவன் (தமையன்)
ஒரு பெண் மற்ற தோழிகளை அழைக்கின்றாள். எப்படி அழைக்கின்றாள்? சிவந்த வரி பரந்த கண்களை உடைய தோழிகளே! என்று. அழகிய பெண்களின் கண்களில் சிவந்த வரிகள் காணப்படுவது சிறப்பு என்று பொதுவாகக் கருதப்படும் உலக வழக்கு உள்ளது. எனவே இவ்வாறு அழைப்பதாகப் புலவர் காட்டுகிறார். தோழிமார்களை ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். ஊஞ்சல் ஆடும் போது என்னென்ன நிகழும் என்று கூறி அந்தப் பெண் ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். பட்டால் ஆன மேல் ஆடை அசையும் படி ஊஞ்சல் ஆடுவோம். ஒளி மிக்க பொன்னால் ஆன அணிகள் அசைய ஊஞ்சல் ஆடுவோம். அழகிய மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து அசைய ஊஞ்சல் ஆடுவோம் என்கிறாள். ஊஞ்சல் ஆடும் வேகத்தில் ஆடை, அணிகலன் ஆகியன அசைதல் இயல்பு. கூந்தல் அவிழ்தலும் இயல்பு. எனவே இவ்வாறு அந்தப் பெண் கூறுகின்றாள். ஊஞ்சல் ஆடும் போது தலைவனின் புகழைப் பாடி ஆடுதல் இயற்கை. எனவே இங்கும் தலைவன் புகழ் பாடி ஆடத் தலைவி தோழியை அழைக்கிறாள்.
|
|
ஒரு பெண் மற்ற தோழிகளை
அழைக்கின்றாள். எப்படி அழைக்கின்றாள்? சிவந்த வரி பரந்த கண்களை உடைய தோழிகளே!
என்று. அழகிய பெண்களின் கண்களில் சிவந்த வரிகள் காணப்படுவது சிறப்பு என்று
பொதுவாகக் கருதப்படும் உலக வழக்கு உள்ளது. எனவே இவ்வாறு அழைப்பதாகப் புலவர்
காட்டுகிறார். தோழிமார்களை ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். ஊஞ்சல் ஆடும் போது என்னென்ன
நிகழும் என்று கூறி அந்தப் பெண் ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். பட்டால் ஆன மேல் ஆடை
அசையும் படி ஊஞ்சல் ஆடுவோம். ஒளி மிக்க பொன்னால் ஆன அணிகள் அசைய ஊஞ்சல் ஆடுவோம்.
அழகிய மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து அசைய ஊஞ்சல் ஆடுவோம் என்கிறாள். ஊஞ்சல் ஆடும்
வேகத்தில் ஆடை, அணிகலன் ஆகியன அசைதல் இயல்பு. கூந்தல் அவிழ்தலும் இயல்பு. எனவே
இவ்வாறு அந்தப் பெண் கூறுகின்றாள். ஊஞ்சல் ஆடும் போது தலைவனின் புகழைப் பாடி
ஆடுதல் இயற்கை. எனவே இங்கும் தலைவன் புகழ் பாடி ஆடத் தலைவி தோழியை அழைக்கிறாள்.
தெள்ளாறு என்ற
இடத்தில் போர் நடந்தது. அந்தப் போரில் நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி
பெற்றான். அத்தகைய நந்தி வர்மன் திசைகள் எல்லாம் சுற்றிச் செல்கின்ற படைகளை
உடையவன். அவன் காடவன் என்பவனுடைய தமையன். இத்தகைய சிறப்புகளை உடைய நந்திவர்மனின்
கையில் உள்ள வேலையும் அவனது காஞ்சிபுர நகரையும் புகழ்ந்து பாடி நாம் ஊசல் ஆடுவோம்
என்று தலைவி தோழியை அழைக்கிறாள்.
நந்திவர்மன் தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றிபெற்றான் என்ற வரலாற்றுச் செய்தியும் இப்பாடல் மூலம் தெரிய வருகிறது.
2. மறம்
மறம் என்றால் வீரம் என்று பொருள். புறத்துறைகளில் ஒன்று மகள் மறுத்து மொழிதல் என்ற துறை ஆகும். மறவர் குலத்தில் பிறந்தவள் ஒரு பெண். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்புகின்றான். எனவே, மறவர்களிடம் ஒரு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் மறவர்களிடம் சென்று மன்னன் கூறிய செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட மறவர்கள் அந்தத் தூதுவனிடம் தங்கள் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தூது அனுப்பிய மன்னனின் வீரத்தை இகழ்ந்து கூறுகின்றனர். இறுதியில் மன்னனுக்குத் தம் குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இதுவே மகள் மறுத்து மொழிதல் என்ற துறையின் பொருள். மறவர்கள் தம் மறப் பண்பை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதே மறம் என்ற கலம்பக உறுப்பு ஆகும்.
|
அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல்
நான்கிழவன் அசைந்தேன் என்றோ வம்பு ஒன்று குழலாளை மணம் பேசி
வரவிடுத்தார் மன்னர் தூதர் செம் பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்
நந்திபதம் சேரார் ஆனைக் கொம்பு அன்றோ நம் குடிலில் குறுங்காலும்
நெடுவளையும் குனிந்து பாரே |
(ஒன்று = கொள்ளும்; நாண் = அம்பின் பூட்டுக்கயிறு: அசைந்தேன் = தளர்ந்தேன்; வம்பு = நறுமணம்; குழலாள் = கூந்தலை உடைய பெண்; மணம் = திருமணம்; பதம் = அடிகள் (பாதங்கள்); குறுங்கால் = சிறிய தூண்; நெடுவளை = நீண்ட வளைச்சட்டங்கள்)
|
|
|
தூதுவனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை ஆகிய மறவன்
கூறுகின்றான். மன்னன் அனுப்பிய தூதனே! என் வில் ஒடிந்துள்ளது. அதன் பூட்டுக்
கயிறு அறுந்து உள்ளது. நான் மூப்பு அடைந்து விட்டேன் என்று எண்ணியா உன் மன்னன்
உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க கூந்தலை உடையவள் என் மகள். இவளைத்
திருமணம் செய்ய வேண்டி உன்னை அனுப்பி உள்ளான்
உன் மன்னன். என்னுடைய இந்தச் சிறிய குடிசையைப் பார், இந்தச் குடிசையில் சிறிய
தூண்களும் நீண்ட வளைச் சட்டங்களும் உள்ளன. அவை எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன என்று
தெரியுமா? நந்திவர்மன் ஆகிய என் மன்னன் தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்தான்.
பகை மன்னர்களுடைய யானைகள் அப்போரில் இறந்தன. அந்த யானைகளின் கொம்புகளே இந்தத்
தூண்களும் நெடிய வளைச் சட்டங்களும் ஆகும். நான் கூறுவதில் உனக்குச் சந்தேகம்
இருக்கலாம். எனவே, இந்தக் குடிசையில் நீ குனிந்து பார் என்று பெண்ணின் தந்தை
கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் நந்திவர்மனின் வீரமும் அவன்
படைவீரர்களின் வீரமும் தெரியவருகின்றன. குடிசைகளில் தூண்களாகவும் வளைச்
சட்டங்களாகவும் பயன்படுத்தும் அளவுக்குப் பல யானைகள் இறந்துள்ளன என்பது
குறிப்பிடப்படுகிறது. |
“மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கணடாற் குயிலுக்கே குழைதி யாகிற்
கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே கூடாமன்னர்
எயில் கெண்டான் மல்லையங்கோ னந்திவேந்த
னிகல்கொண்டா ரிருங்கடம்பூர் வீசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
யதிசயிக்கு நடையாரை யகல நூற்றேன்.”



Comments
Post a Comment