Posts

Image
  திரையிசைப் பாடல் – 1 பாடல் – தூங்காதே தம்பி தூங்காதே… பாடலாசிரியர் – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை – எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம் – நடோடி மன்னன் (1958) பாடல் தூங்காதேதம்பிதூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீதாங்கியஉடையும்ஆயுதமும் பல சரித்திரக்கதைசொல்லும்சிறைக்கதவும் சக்திஇருந்தால்உனைக்கண்டுசிரிக்கும் சத்திரம்தான்உனக்குஇடம்கொடுக்கும் (தூங்காதேதம்பி) நல்லபொழுதையெல்லாம்தூங்கிக்கழிப்பவர்கள் நாட்டைக்கெடுத்ததுடன்தானும்கெட்டார் - சிலர்அல்லும்பகலும்தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்றுஅலட்டிக்கொண்டார் விழித்துக்கொண்டோரெல்லாம்பிழைத்துக்கொண்டார் உன்போல்குறட்டைவிட்டோரெல்லாம்கோட்டைவிட்டார் (தூங்காதேதம்பி) போர்ப்படைதனில்தூங்கியவன்வெற்றிஇழந்தான் - உயர்பள்ளியில்தூங்கியவன்கல்விஇழந்தான் கடைதனில்தூங்கியவன்முதலிழந்தான் - கொண்டகடமையில்தூங்கியவன்புகழ்இழந்தான் - சிலபொறுப்புள்ளமனிதரின்தூக்கத்தினால் - பலபொன்னானவேலையெல்லாம்தூங்குதப்பா  (தூங்காதே தம்பி )  

நன்னூல் - நூற்பா

Image
                                                                                 நன்னூல்                                                         ஆசிரியர் :  பவணந்தி முனிவர்.   பாடஞ்சொல்லலின் வரலாறு ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடனும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப ( 36)   மாணாக்கனது வரலாறு தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழிபடுவ...

நன்னூல் - விளக்கம்

Image
  நன்னூல் (ஆசிரியர்:  பவணந்தி முனிவர்) விளக்கம்   கற்பிக்கும் முறை  பாடம் சொல்லும் முறை பற்றி குறிப்பிடும்பொழுது, சொல்லிக் கொடுப்பதற்கான சரியான நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து சரியான முறையில் இருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். கற்பிக்க தொடங்கும் முன் தான் விரும்பி வணங்கக்கூடிய கடவுளை நினைத்து வணங்கி, எதைச் சொல்லிக்கொடுக்கப் போகிறோமோ அப்பாடப்பொருளை எப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு, பாடத்தை வேகமாக இல்லாமல் நிதானமாக எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது கோபம் கொள்ளாமலும் அன்புடனும் முகமலர்ச்சியுடனும் மாணவர்களின் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை அறிந்து அவர்களது மனதில் பதியும்படி தெளிவான மனநிலையுடன் கற்பிக்கவேண்டும். (நூற்பா எண் - 36)   கற்பித்தலுக்கு உரியோர் ஒரு ஆசிரியர் தனது மகனுக்கும், தனது ஆசிரியரின் மகனுக்கும், அரசனது மகனுக்கும், அதிக பொருட்களைக் கொடுத்தேனும் பாடம் கற்க எண்ணுவோனுக்கும், தன்னை வழிபடுவோனுக்கும், தன்னால் கற்பிக்கப்படுவனவற்றை விரைவாகக் கற்றுக் கொள்ளும் அறிவுடையோனுக்கும் நூல் பொருளைக் க...
Image
  உலகமயமாக்கல் பின்னணியில்   பண்பாடும் , வாசிப்பும் தொ. பரமசிவம் (மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் ஆற்றிய உரை )   ‘ பேசுகின்ற இடம் மதுரை : பேசப்படுகின்ற விசயம் புத்தகம் , எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது . ஏனென்றால் , தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில்தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன . கலித்தொகை என்னும் செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது . பரிபாடல் என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம் . அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு . இந்த ஊரின் நீரும்இ நெருப்பும்கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல் . “ உலகமயமாக்கலில் பண்பாடும் ; வாசிப்பும் ” என்னும் தலைப்பை கொடுத்திருக்கிறார்கள் . புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல . அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது . ஒரு செடியில் வேருக்கும் விழுகும் உள்ள தொடர்பு போன்றது புத்தங்களும் வாசிப்பவனுக்கும்உள்ள தொடர்பு . புத்தகங்களின்...